கோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்

Jul 24, 2021 04:59 PM 1230

கோவையில், இலவச மதிய உணவு திட்டம் மூலம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக, மதிய உணவு வழங்கும் நிகழ்வை, முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, இன்று செல்வபுரம், கல்லாமேடு, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மதிய உணவை அவர் வழங்கினார்.

அதன்படி, முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நோய்தடுப்பு உபகரணங்களையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Comment

Successfully posted