கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகார்

Sep 18, 2021 08:14 AM 497

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தனியார் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களுடன் கோட்டாட்சியர் முருகேசன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பேசிய அவர், காலாவதியான இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும், தங்கும் விடுதிகளில் அதிக கட்டணத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Comment

Successfully posted