திமுக நிர்வாகிகளுக்குள்ளே வாக்குவாதம்!

Jun 20, 2021 03:26 PM 420

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைச்சர் பங்கேற்கவிருந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுக நிர்வாகிகளுக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டது.

குடியாத்தம் அருகே மோர்தானா அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதன் பிறகு மேல்ஆலத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மண்வள அட்டை பயனாளிகளுக்கு உதவிகளை வழங்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீஷ் மற்றும் மற்றும் அந்த பகுதியை கட்சி நிர்வாகிகள், தங்கள் பகுதிக்கு வரும் அமைச்சர் குறித்து முன் கூட்டியே ஏன் தகவல் சொல்லவில்லை எனக்கூறி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்குவாதம் செய்தனர்.

Comment

Successfully posted