டெல்லி சென்ற கண்டெய்னரில் தீ விபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

Apr 21, 2021 11:51 AM 408

சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரி மூலமாக பிரிட்ஜ்கள் கொண்டு சென்ற போது தீ விபத்து. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிரிட்ஜ்கள் எரிந்து நாசம்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரக்கூடிய சாம்சங் பிரிட்ஜ் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்ட சுமார் 70 பிரிட்ஜ்கள் கண்டைனர் லாரி மூலமாக ஏற்றிக்கொண்டு டெல்லியை அடுத்த நொய்டாவிற்கு இன்று காலை 10 மணி அளவில் புறப்பட்டது லாரி வானகரம் அருகே வரும்போது தீப்பற்றியது உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயம்பேடு மதுரவாயல் பகுதியில் இருந்து தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். இருந்தபோதிலும் லாரியில் வைக்கப்பட்டிருந்த 15 பிரிட்ஜ்கள் எரிந்து நாசமானது. மீதம் சுமார் 55 பிரிட்ஜ்கள் மீட்க்கப்பட்டுள்ளன. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருந்த போதிலும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான முதற்கட்ட விசாரணையில் லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கும் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted