4ஆயிரத்தை எட்டும் தினசரி கொரோனா பாதிப்பு - மீண்டும் தலைதூக்கும் அபாயம்!

Apr 07, 2021 09:19 PM 533

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 986 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 9 லட்சத்து 11 ஆயிரத்து 110ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 546ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 27 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்றும் வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 986 பேரில், 2 ஆயிரத்து 391 பேர் ஆண்களும், ஆயிரத்து 595 பேர் பெண்களும் ஆவர்.

அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 332 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 208 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 141 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted