கொரோனா தினசரி பாதிப்பு 21,228 ஆக அதிகரிப்பு!

May 04, 2021 07:48 PM 619

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 21 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 34 பேர் உள்பட 21 ஆயிரத்து 228 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 230 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 450 பேர் ஆண்கள் என்றும், எட்டாயிரத்து 778 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஆறாயிரத்து 228 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 608 பேரும், கோவையில் ஆயிரத்து 509 பேரும், திருவள்ளூரில் ஆயிரத்து 152 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிபேட்டையில் 747 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 719 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆயிரத்து 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 144 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Comment

Successfully posted