நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்தது

Jun 11, 2021 12:40 PM 1316

நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 3 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 79ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 580 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 11 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 24 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted