நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

May 18, 2021 10:25 AM 1145

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 63 ஆயிரமாகக் குறைந்துள்ள நிலையில், உயிரிழப்பானது இதுவரை இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக இரண்டரை லட்சம் பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் ஒரே நாளில் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், கண்காணிப்பு முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 18 கோடியே 33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted