கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

May 30, 2021 11:17 AM 734

தமிழ்நாட்டில், முழு ஊரடங்கு காலத்தில் ஓரளவு கொரோனா தொற்று குறைந்தபோதிலும் இறப்பு விகிதம் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த திக்குமுக்காடிய அரசு, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்தது. 11ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான காலகட்டத்தில், தொற்று பரவல் ஓரளவு குறைந்தபோதும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மே 10ம் தேதியன்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 232 இருந்த நிலையில், நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 11ம் தேதி 298 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை மே 15ம் தேதி 303 ஆக அதிகரித்தது. மே 29ம் தேதியன்று பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 500-ஐ நெருங்குகிறது.

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை தடுக்க, அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவும், போதுமான ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comment

Successfully posted