பறவைக்காய்ச்சல், கொரோனா அச்சத்தால் மூட்டை விலை வீழ்ச்சி !

Mar 18, 2020 05:20 PM 1280

கேரளாவில் பறவை காய்ச்சல்  ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் இருந்து முட்டைகள் கொள்முதல் கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பண்ணை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை சாப்பிடுவதன் மூலமாக கொரோனா நோய் தொற்று ஏற்படும் என்ற வதந்தியால் முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை  1 ரூபாய் 28 காசுகள் குறைத்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை 1 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, விலை குறைந்ததால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Comment

Successfully posted