நாடு முழுவதும் நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா

Apr 11, 2021 11:25 AM 1000

நாடு முழுவதும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் கொரோனா தடுப்பூசிகள் முகாம் நடைபெறுகிறது.

கடந்த வியாழன்று மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படி, கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

image

கொரோனா தடுப்பூசி மையத்திற்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதையொட்டி, பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்தவும், கொரோனா சிகிச்சைக்கு உதவும்படியும் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முகக்கவசம் அணிவதுடன் பிறரையும் அணியும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் யாருக்காவது கொரோனா இருந்தால், அங்குக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் முகாமில் தடுப்பு மருந்துகளை வீணாக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

Comment

Successfully posted