தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள்

May 09, 2021 05:27 PM 485

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை 64 லட்சத்து 3 ஆயிரத்து 950 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி என மொத்தம் 74 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ் தடுப்பு மருந்துகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் கூடுதலாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசியின் 5 லட்சத்து 88 ஆயிரம் டோசுகள் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted