திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Feb 26, 2020 09:36 AM 230

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல்கள் எண்ணிக்கை பணி நடைபெற்றது. செயல் அலுவலர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியில், சிவகாசி பதினென்னு உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 2கோடியே 25 லட்சத்து 67ஆயிரத்து 16ரூபாயும், ஆயிரத்து 848 கிராம் தங்கமும், 27 ஆயிரத்து 511 கிராம் வெள்ளியும், 500 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளையும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

Comment

Successfully posted