இரண்டாம் அலை முடிவு? 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்த கொரோனா

Jun 15, 2021 10:35 AM 737

இந்தியாவில், கொரோனா தொற்று தினசரி பாதிப்பு, 75 நாட்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் 60 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 95 லட்சத்து 70ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 31ஆக அதிகரித்துள்ளது.

ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 9 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted