துணிக்கடைக்கு வாடிக்கையாளராக மாறிய பசு மாடு...

Nov 09, 2019 05:54 PM 1920


ஆந்திராவில் துணிக்கடைக்கு பசு மாடு சென்று மெத்தையில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவின் கடபா மாவட்டத்தில் உள்ள மைடுகூர் நகரில் “சாய்பாபா ” என்ற துணிக்கடை உள்ளது. இந்த கடைக்கு ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். இதனிடையே கடந்த 6- 7 மாதங்களாக வெப்பத்தை தணிக்க பசு மாடு அக்கடைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் விரட்டி அடித்த கடை உரிமையாளர் , பின்பு அதன் செய்கையை கண்டு கடைக்குள் அனுமதித்துள்ளார்.

கடைக்குள்ளே சென்ற பசு மாடு மின்விசிறியின் கீழே உள்ள மெத்தையில் அமர்ந்து வாடிக்கையாளர்களை வேடிக்கை பார்க்கிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து எந்தவிதமான தொல்லையும் ஏற்படுத்தாமல் வெளியே செல்கிறது. இந்த நெகிழ்ச்சி தருணம் கடைக்கு வந்து செல்லும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பசுமாடு மெத்தையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Comment

Successfully posted