"ஓடஓட விரட்டி வெட்டப்படும்" கொலை வழக்கு குற்றவாளிகள்

Dec 04, 2021 10:26 AM 2184

சென்னை கொரட்டூரில், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், ரவுடிகளால் ஓட ஓட விரட்டி வெட்டப்படும் சிசிடிவி காட்சி வெளியானது.

கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரடிவு அரவிந்தன், கடந்த 2018ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், ஆகாஷ், பிரசாந்த், மணி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், 3 பேரும் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு பேருந்து மூலம் பாடி திரும்பி கொண்டிருந்தனர்.

இதனையறிந்த கொலையான அரவிந்தனின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் என 3 பேர் ஒன்று சேர்ந்து, பேருந்திலிருந்து இறங்கிய ஆகாஷ், பிரசாத், மணி ஆகிய 3 பேரையும் ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை மூலம், தலைமைறைவான அரவிந்தனின் தந்தை மற்றும் சகோதரர்களை தேடி வருகின்றனர்.

 

Comment

Successfully posted