சூரிய சக்தி மூலம் நீர்ப்பாசனம்: கலக்கும் கடலூர் விவசாயி

Apr 12, 2021 04:06 PM 1434

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் விதமாக, விவசாயி ஒருவர் சூரிய மின் சக்தியில் நீர்ப் பாசனம் செய்து அசத்தி வருகிறார்,

விருத்தாச்சலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர், மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்தி மாற்று விவசாயம் செய்து வருகிறார். தனக்குச் சொந்தமான விளை நிலங்களில் மரபயிர்கள், பூ ரகங்களை பயிர் செய்துள்ள இவர், உரமிடுதல், செலவினம், ஆள் பற்றாக்குறை, மின் சக்தி குறைவு உள்ளிட்ட அனைத்தையும் சிக்கனப்படுத்தும் வகையில், சூரிய மின்சக்தி மூலம் இயங்கும், சோலார் பேனலில் இருந்து வரும் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்.

மேலும், அரசு வழங்கும் மானியங்கள் மூலம் சிறப்பாக பயிர் செய்து வரும் விவசாயி மணிமாறன், தனக்கு போதிய லாபம் கிடைப்பதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted