இறந்தவரின் ஆன்மா மீண்டும் வரும் என்ற நம்பிக்கையுடன் - மெக்ஸிகோவில் விசித்திரமான இறந்தோர் நாள் திருவிழா

Oct 31, 2018 12:56 AM 591

 

மெக்ஸிகோவில் விசித்திரமான திருவிழா நடைபெற்று வருகிறது. பல நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் பெயர் இறந்தோர் நாள் பேரணி. இந்த திருவிழாவில் இறந்தவர்கள் நம்முடன் மீண்டும் வந்து தங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் விசித்திரமான ஆவிகளின் உடைகளையும், ஆவிகள் போன்று தோற்றத்தையும் கொண்டு நடத்தப்படுகிற இந்த பேரணியில், ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தலைப்பை முக்கியத்துவமாக கொண்டு, இறந்தோர் நாள் பேரணி நடைபெறும். குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த ஆண்டு இறந்தோர் நாள் பேரணி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் 2 ஆம் தேதிதான் இந்த பேரணி நடைபெறும். இருப்பினும், இறந்தோர் நாள் பேரணி மெக்ஸிகோவில் பகுதிக்கு பகுதி வேறுபடும். இறந்தவர்களை கெளரவிப்பதன் மூலம் அவர்களின் "ஆன்மா நம்முடன் தங்க மீண்டும் வரும்" என்பது அம்மக்களின் நம்பிக்கை.மரணித்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. இந்த திருவிழாவின் போது ஆவிகள் போன்று உடையணிந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மூதாதையர்களை நினைவு கூர்வார்கள். சிலர் உணவு படைப்பார்கள், சிலர் மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள். மெக்ஸிகோவில் இந்தாண்டு நடைபெற்ற பேரணியின் மழை பெய்தது, இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தோர் நாள் பேரணியில் பங்கேற்றார்கள்.

Comment

Successfully posted