பத்திரிகையாளரின் கர்ப்பம் குறித்த கேள்விக்கு நெத்தி அடி கொடுத்த தீபிகா

Jan 12, 2020 12:36 PM 1938

நடிகை தீபிகா படுகோன் நடித்த 'செப்பாக்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி  உலகமெங்கிலும்  வெளியாகி உள்ளது.

இந்த படம் லக்ஷ்மி அகர்வால் என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உண்மை கதையை தழுவி  எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் தீபிகா படுகோனின் நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் , படத்தை பற்றிய விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

சமீபத்தில் JNU பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடிகை தீபிகா ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இவரின் இந்த முயற்சிக்கு திரைப்பிரபலங்கள் பாராட்டினாலும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்' செப்பாக்' படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பத்திரிகையாளர் ஒருவர் தீபிகாவின் கர்ப்பம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் . அதற்கு தீபிகா பதிலளிக்கையில்' நான் கர்ப்பமாக இருப்பது போலவா இருக்கிறேன். குழந்தை எப்போது வேண்டும் என்று திட்டமிடும் போது உங்களை கேட்கிறேன் அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கும் போது நான் குழந்தையை பெற்றுக் கொள்கிறேன்.மேலும் நான் கற்பம் ஆனாலும் 9 மாதங்களில் உங்களுக்கு தெரியவரும் என்று பத்திரிக்கையாளரின் கேள்விக்கு நெத்தி அடி கொடுத்துள்ளார் தீபிகா.

Comment

Successfully posted