டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

Jun 13, 2021 09:14 PM 793

டெல்லியில், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, அனைத்து கடைகளும் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கில் இருந்து கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து கடைகள், மால்கள் மற்றும் உணவகங்கள், திங்கள் கிழமை முதல், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் குரூப் ஏ ஊழியர்கள் 100 சதவீத வருகையுடனும், மற்ற ஊழியர்கள் 50 சதவீத வருகையுடனும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், ஒரு மண்டலத்திற்கு ஒரு வாரச் சந்தை மட்டும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கவும், ஆட்டோ மற்றும் டாக்சியில், ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ள டெல்லி அரசு, பள்ளிகள், கல்லூரிகள், நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted