டெல்லியில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Feb 17, 2020 10:35 AM 178

டெல்லியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 பேரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

டெல்லியை சேர்ந்த ராஜா குரேஷி மற்றும் ரமேஷ் பகதூர் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்நிலையில் இருவரும் இன்று காலை ரோகினி அடுத்த புல் பிரகலாத்பூர் பகுதிக்கு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினரை கண்டவுடன் இரண்டு பேரும் தப்ப முயன்றனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராஜா மற்றும் ரமேஷ் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Comment

Successfully posted