மதுரை சித்திரைத் திருவிழா: திருக்கல்யாணத்துக்கு பக்தர்கள் அனுமதி

Apr 14, 2021 11:28 AM 1205

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவ தினத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சித்திரைப் பெருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் பெருவிழா பக்தர்களின்றி கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் எனவும், சுவாமி புறப்பாடு காலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

விழாவின் 10ம் நாளான 24ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், திருக்கல்யாண மண்டபத்தில் திருமண கோலத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted