குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

Nov 25, 2019 08:58 AM 386

திருவண்ணாமலையில் குபேர கிரிவலத்தை முன்னிட்டு கிரிவலப்பாதையில் உள்ள குபேரன் லிங்கத்தினை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கத்தில் 7-வது லிங்கமாக குபேர லிங்கம் உள்ளது. கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதோஷம், சிவராத்திரி நாளில் குபேரர் கிரிவலம் செல்வார் என்பதும், லிங்கத்திற்கு குபேரர் பூஜை செய்வதை கண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம்.குபேர கிரிவலத்தை ஒட்டி நேற்று, குபேர லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணகானோர் திருவண்ணாமலையில் குவிந்தனர். குபேர கிரிவலத்தையொட்டி குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டனர். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து குபேர லிங்கத்தை தரிசித்து கிரிவலம் வந்தனர்.

Comment

Successfully posted