மாஸ் காட்டும் தனுஷ்... #D40 மோஷன் போஸ்டர் வெளியீடு

Feb 19, 2020 05:57 PM 553

நடிகர் தனுஷ் நடிக்கும் 40வது படத்தின் மோஷன்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கேரள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்தில் இசையமைத்துள்ளார்.

image

ஏற்கனவே பெரிய மீசையுடன் நடிகர் தனுஷின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின. படத்திற்கு ‘சுருளி’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் உலா வந்தன.இந்நிலையில் பெயரிடப்படாத இந்த படத்தின் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19ம் தேதி  மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வெளியான மோஷன்  போஸ்டரில் மாஸ் லுக்கில் தனுஷ் மிரட்டியுள்ளார். படத்திற்கு “ஜகமே தந்திரம்” என பெயரிடப்பட்டுள்ளது. படமானது மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted