கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - மாவட்ட நிர்வாகத்திற்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்

Nov 11, 2018 02:50 PM 534

கஜா புயல் கரையைக் கடக்கும்போது தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகத்திற்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 14 ஆம் தேதி இரவு அல்லது 15 ஆம் தேதி காலை தமிழகம் -ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் 15 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில், கனமழையால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என, பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Comment

Successfully posted