பட்டாகத்தியுடன் திமுகவினர் அராஜகம் - பொதுமக்கள் அச்சம்

Jun 06, 2021 01:10 PM 1248

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த திமுக-வினர், அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாடிப்பட்டியைச் சேர்ந்த திமுக இளைஞரணி செயலாளர் அசோக் என்பவர், சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் அதிமுக-வினருடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை - திண்டுக்கல் சாலையில் அதிமுக பிரமுகர் நடத்தி வரும் பேக்கரி கடைக்கு பட்டாக் கத்தியுடன் வந்த அசோக்கும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். பேக்கரி மூடப்பட்டிருந்த நிலையில், வெளியே இருந்த டேபிள், சேர், கண்ணாடி, ஜன்னல் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர்.

Comment

Successfully posted