ஆட்சிக்கு முன்பே அராஜகம் செய்யும் திமுக!

May 04, 2021 04:13 PM 458

ஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கி இருக்கும் திமுகவினர், சென்னையில் அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஜெ.ஜெ.நகரில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கி வந்த அம்மா உணவகத்தின் மீது தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இன்று காலை அம்மா உணவகத்திற்கு சென்ற திமுக குண்டர்கள் 15-க்கும் மேற்பட்டோர் வாசலில் இருந்த உணவகத்தின் போர்டு மற்றும் விலை பட்டியல் பதாகைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அம்மா உணவகத்தின் உள்ளே புகுந்த திமுக குண்டர்கள் சமைத்து வைத்து இருந்த உணவு பாத்திரங்களை கீழே தள்ளியும், காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வீசியெறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியில் இருந்த பெண்களை உருட்டுக்கட்டைகளை கொண்டும் அவர்கள் தாக்கி இருக்கிறனர்.

ஆட்சி துவங்கும் முன்பே அராஜகத்தில் ஈடுபட்டு இருக்கும் தி.மு.க.வினர், அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அடுத்த 5 ஆண்டுகள் தமிழக பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அராஜகத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மா உணவகத்தில் திமுக-வினர் நடத்தி இந்த அராஜகம் தெரியாமல் வழக்கம் போல உணவு வாங்க ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் தவித்த ஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா உணவகத்தினுள் புகுந்து தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். திமுகவினரின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Comment

Successfully posted