ரஜினி பயத்தில் திமுக.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்

Oct 10, 2019 02:03 PM 955

திமுக என்றாலே மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றும் கட்சி என்ற பெயர் உள்ளது.தான் நல்லது செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் செய்வதையும் தடுப்பது தான் இந்த கூட்டத்தின் முக்கிய வேலை.இப்படி நேற்று ஒரு வேலையை செய்து தான் ட்விட்டர் வாசிகளிடம் மரண கலாய் வாங்கியுள்ளனர் திமுகவினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் இருக்கும் அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் சீரமைத்து தந்துள்ளனர். அதற்கான கல்வெட்டையும் நிறுவி உள்ளனர்.இதனை அறிந்த திமுகவினர், இந்த கல்வெட்டை பார்த்தால் மக்கள் அவரின் பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் கல்வெட்டை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கல்வெட்டை நீக்கியதை பார்த்த ரஜினி ஆதரவாளர்கள், ரஜினி பயத்தில் திமுக என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் இந்தியளவில் முதலிடத்தில் நேற்று ட்ரெண்ட் செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து திமுகவினரை கலாய்த்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

 

 

 

 

Comment

Successfully posted