திருச்சி சிவாவை எதிர்த்ததால் பழி தீர்க்கப்பட்ட சூர்யா வெற்றி கொண்டான்!

Oct 13, 2018 05:43 PM 2795

திமுக தலைமைக் கழக வழக்கறிஞராக இருப்பவர் சூர்யா வெற்றி கொண்டான். அண்மையில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை எதிர்த்து இவர் கருத்து வெளியிட்டார். இதன் மூலம் திமுக உட்கட்சி பூசல் அம்பலமானது.

image

இந்நிலையில் இன்று திமுக தலைமைக் கழகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக சார்பில் ஊடக விவாதங்களில் யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இதில் சூர்யா வெற்றி கொண்டான் பெயர் இடம்பெறவில்லை. ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு திமுக சார்பில் கருத்துக்களை எடுத்துக் கூறி வரும் அவரது பெயர் புதிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிவாவை எதிர்த்ததாலேயே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் தற்போது தான் மோதல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் சூர்யா வெற்றி கொண்டானிடம் இருந்து பதவியை பறித்தால், அது மேலும் மோதலுக்கு வழிவகுக்கும் என்பது கூட தெரியாமல் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது.

திருச்சி சிவாவை சமாதானப்படுத்த முடியாமல், இந்த ஒரு முடிவை ஸ்டாலின் எடுத்திருப்பது, திமுக தலைமை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

டெல்லி விமான நிலையத்தில் பெண் எம்.பி.யுடன் சண்டைபோட்ட வீரர் திருச்சி சிவா. சூர்யா வெற்றி கொண்டான் மட்டும் அவ்வளவு சாதாரண மனிதர் அல்ல. கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில், உடலின் முன்பு நின்று செல்ஃபி எடுத்த மகான் தான் இந்த திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான்.

image

Comment

Successfully posted

Super User

தி மு க குடும்பகட்சி தொண்டர்களுக்கு மதிப்பும் பொறுப்பும் கிடையாது


Super User

அடியோடுஅழிக்கவேண்டியவர்கள்