அதிமுகவினர் மீது திமுக கும்பல் கொலைவெறி தாக்குதல்

May 23, 2021 09:25 PM 605

கடலூர் அருகே அதிமுகவினர் மீது திமுக கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில், அதிமுகவினர் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அடுத்த உள்ளேரிபட்டு கிராமத்தில், திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள், அதிமுகவிற்காக தேர்தல் பணியில் ஈடுபட்ட சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய 3 பேர் மீது சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அதிமுகவினரின் வீடுகள் மற்றும் கடைகளையும் அவர்கள் ஆயுதங்களை கொண்டு சூறையாடினர். தாக்குதலில் படுகாயமடைந்த 3 அதிமுகவினர்,கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comment

Successfully posted