மருத்துவ மேற்படிப்பு - மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்

Sep 18, 2020 09:48 PM 434

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு கோரிய தமிழக அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு செப்டம்பர் 25 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Comment

Successfully posted