ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நீர்நிலைகளில் கூடாதீர்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

Nov 19, 2020 08:30 PM 1136

டெல்லியில், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கான அபராதத் தொகை, இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலைமை குறித்து, அனைத்துக் கட்சிகளுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவதை சரியாக பின்பற்றுகின்றனர். ஆனால் சிலர், விதிகளை மதிப்பதில்லை என்றார்.

எனவே, முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, 500 ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். நாளை நடைபெறும் சாத் பூஜை விழாவையொட்டி, நீர்நிலைகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் கூட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted