ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Jun 09, 2021 03:24 PM 2276

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூர் பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வனத்துறை கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. நடுவட்டத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும்.  

நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் - தலைமை நீதிபதி அமர்வு

வனப்பகுதியில் இருந்து மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted