எப்பா...கைதி படத்தின் வசூல் இவ்வளவா ?

Nov 12, 2019 01:44 PM 3023


தீபாவளிக்கு பட்டாசு வீட்டில் வைக்குறோமோ இல்லையோ,நிச்சயமாக தியேட்டரில் சரவடி வெடிக்கும்.அதே போல் இந்த தீபாவளிக்கு பிகில்,கைதி இரண்டு திரைப்படங்களும் வெளியாகி திரையரங்குகளை அதிரவைத்தன.விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தை விட கைதி திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தால் கைதி திரைப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

கைதி படத்தில் கதாநாயகியுடன் டூயட், பாடல், காமெடி என இப்படி எதுவும் இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்ததே கைதியின் வெற்றி என விமர்சனங்களில் கூறுகின்றனர்.தீபாவளிக்கு வெளியான இந்த படம் இதுவரை 110 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.கார்த்தி நடிப்பில் வெளிவந்த படங்களிலே அதிக வசூல் செய்த படமாக கைதி திரைப்படம் திகழ்கிறது.

மேலும்,கைதி படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தளபதி 64 படத்தை இயக்குவதால் ரசிகர்களுக்கு தளபதி 64 படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted