காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? - நிர்மலாசீதாரமன் கேள்வி

Sep 30, 2020 10:07 AM 797

விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டம் இயற்ற வேண்டும் என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையில், விவசாயப் பொருட்களை வர்த்தகம் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள நிர்மலா சீதாராமன், அது, காங்கிரசின் பொய்யான வாக்குறுதியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Comment

Successfully posted