“இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...

Feb 21, 2020 06:02 PM 3912

கிரிக்கெட் போட்டி ஒன்றில் நாய் ஒன்று விக்கெட் கீப்பராக செயல்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் பேட்டிங் செய்ய, நாய் ஒன்று விக்கெட் கீப்பராக செயல்படுகிறது. சிறுமி பந்தை அடித்தவுடன் நாய் வேகமாக பந்தை நோக்கி ஓடுகிறது.இது குறித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட Simi Garewal என்ற பெண், இந்த நாய்க்கு 2020ம் ஆண்டின் சிறந்த ஃபீல்டர்  (Best Fielder) என்ற விருது வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 image

இந்த வீடியோவை ரீ-ட்விட் செய்துள்ள பலரும் ‘இது தோனியின் நாய்’ என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ 4000 லைக்குகளையும், 1000 ரீ-ட்விட்களையும் பெற்றுள்ளது.

Comment

Successfully posted