இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க: கடுப்பாகிய நிவேதா தாமஸ்

Nov 09, 2019 04:19 PM 1731

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் நிவேதா தாமசும் ஒருவர்.இவர் குருவி படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருப்பார்.பின்பு நவீன சரஸ்வதி திரைப்படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார். பாபநாசம் திரைப்படத்தில் கமலின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டையும் பெற்றார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நிவேதா தாமசும் ஒருவர்.இன்று அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்து கொண்டிருந்தார்.பின்பு இப்படிப்பட்ட கேள்வியெல்லாம் கேட்காதீர்கள் எனக் கூறி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.அதில் ’எனக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் பேசியவர்களுக்கு நன்றி,உங்களின் நகைச்சுவையான கேள்விகளுக்கு பதிலளிப்பது மகிழ்ச்சியாக இருந்தது.அதே நேரத்தில் have boy friends? will you marry me? virgin ? இது போன்ற கேள்விகளை நிராகரித்துவிட்டேன். நீங்கள் ஒரு சராசரி மனிதருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறுந்துவிடாதீர்கள், கொஞ்சம் மரியாதையுடன் பேச வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

image

 

 

ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் தர்பார் திரைப்படத்தில் நிவேதா தாமஸ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted