நீலகிரியில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை -விற்பனைக்குத் தயாராகும் அலங்காரச் செடிகள்

Sep 26, 2020 10:31 PM 487

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆயிரக்கணக்கான அலங்காரச் செடிகளை விற்பனைக்காக தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட குன்னூர் சிம்ஸ் பூங்கா சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட சீசனுக்காக இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு செடிகளை விற்பனைக்கு தயார்படுத்தும் பணியில் பூங்கா பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

75,000 அலங்காரச் செடிகள், 38 வகையான மலர் நாற்றுகள், 5 வகையான மரக்கன்றுகளை விற்பனை செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Comment

Successfully posted