திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள், அன்னதான கூடங்களில் ஆய்வு

Jan 21, 2019 03:56 PM 348

திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள் மற்றும் அன்னதான கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில், கிரிவலத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானக்கான பக்தர்கள் ஊர்வலம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கிரிவலப்பாதையில் உள்ள தற்காலிக கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில், 4 குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். கலப்பட டீத்தூள், உணவுகளில் அதிகப்படியான ரசாயன கலப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்குதல் குறித்தும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Comment

Successfully posted