மூச்சு விட சிரமம்: நடிகர் விவேக்குக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை

Apr 16, 2021 02:30 PM 1401

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நடிகர் விவேக் நேற்றையதினம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு இன்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதயம் மிகவும் பலவீனமாக இருக்கும் பொழுது எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted