7.5% உள் ஒதுக்கீடு மூலம் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை உருவாக்கியுள்ள முதல்வர் பழனிசாமி!

Nov 21, 2020 06:34 AM 1004

ஏழு புள்ளி ஐந்து சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் நடப்பாண்டில் 313 அரசு பள்ளி மாணவர்கள் MBBS படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை தமிழக முதலமைச்சர் உருவாக்கி இருக்கிறார். அது பற்றிய விவரங்கள் குறித்த தொகுப்புதான் இந்த கட்டுரை. மருத்துவப் படிப்பில் 313 பேர் சேர்ந்தது பெரிய விஷயமா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு ஒரு புள்ளி விவரத்தைப் பார்த்தால் இந்த எண்ணிக்கையின் வீரியம் புரியும்.

2014ம் ஆண்டு அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 38. அதற்கு அடுத்த ஆண்டான 2015-ல் 36 மாணவர்கள் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் அடியெடுத்து வைத்தனர். 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 34 என்பதாகவே இருந்தது. தமிழ்நாட்டு ஏழை மாணவர்களின் தலையெழுத்தை திருப்பிப் போட்ட நீட் தேர்வு அறிமுகமான 2017-ம் ஆண்டில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

என்ன ஒரு கொடுமை பாருங்கள், கல்வியில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டில் ஒற்றை இலக்க எண்ணில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரக் காரணமாக அமைந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நீட். இதனால், கடந்த 2018ம் ஆண்டில் வெறும் ஐந்து, 2019ம் ஆண்டில் வெறும் ஆறு என மீண்டும் ஒற்றை இலக்கத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தினால், ஏழு புள்ளி ஐந்து சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம், இந்த ஆண்டில் 313 அரசு பள்ளி மாணவர்கள் MBBS படிப்பில் சேர்ந்துள்ளனர்.

Comment

Successfully posted