வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு... தேர்தல் ஆணையம் உத்தரவு

Apr 14, 2021 10:37 AM 3288


வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையானது. இதில், தேர்தல் பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted