2 நிமிடங்கள் தொடர்ச்சியாக யோகா செய்து அசத்திய சிறுமி - இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

Oct 28, 2018 03:10 PM 357

இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து ஒரே ஆசனத்தில் இருந்து இந்திய சாதனை புத்தகத்தில் 5ஆம் வகுப்பு மாணவி ஹரிநிஷா இடம் பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த காளிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகள் ஹரி நிஷா. ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர், துபாய் மற்றும் பூட்டான் சென்று இரண்டு முறை யோகாவுக்கான தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.யோகாசனத்தில் சிரமமான அசைவுகளையும், சர்வ சாதாரணமாக செய்யும் ஹரி நிஷா, ஓம்கார் ஆசனத்தில் நீண்ட நேரம் இருந்து சாதனை படைக்க முடிவெடுத்தார்.

அதன்படி, பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓம்கார் ஆசனத்தில் தலையில் தண்ணீர் டம்ளரை வைத்து, 2 நிமிடம் 42 வினாடிகள் தொடர்ச்சியாக இருந்து ஹரிநிஷா சாதனை படைத்தார். இந்த சாதனையை படைத்த மாணவி ஹரி நிஷாவுக்கு சாதனை தீர்ப்பாளர் விவேக் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
Comment

Successfully posted