கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

Sep 19, 2021 07:54 PM 848

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பட்டப்பகலில் இளைஞர் தீக்குளித்து சாலையில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெரியார் நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி மாணிக்கம் என்பவர், துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 12ம் தேதி மாணிக்கம் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், தன்னை காப்பாற்றுமாறு சாலையில் ஓடி வந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், மாணிக்கத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

image

முன்னாள் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், கள்ளக்காதலி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறியிருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted