1 லட்சத்திற்கு 2 லட்சம் வட்டி கேட்டதால் விவசாயி மனமுடைந்து தற்கொலை!

Oct 15, 2020 09:22 AM 523

மதுரையில், நண்பருக்கு வாங்கிக் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, 2 லட்சத்துக்கும் அதிகமாக கூடுதல் வட்டி கேட்டதால், விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி ஆன இவர், தனது நண்பரான விராலிப்பட்டியைச் சேர்ந்த சின்னன் என்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் 7 ஆண்டுகளாக சின்னன் கடனை திருப்பி செலுத்தாததால், ராஜா 2 லட்ச ரூபாய் வட்டியாக செலுத்தியுள்ளார்.

ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் ராஜாவிடம் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்ததோடு, சின்னனிடம் கடனை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted