ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை மானா படேல்

Jul 02, 2021 07:08 PM 1084

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி பெற்றுள்ளார். இத்தாலி தலைநகர் ரோமில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அகமதாபாத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜ், சஜன் பிரகாஷ் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள நிலையில், நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனையாக மானா படேல் தகுதி பெற்றுள்ளார்.

Comment

Successfully posted