மதுரையில் ரயில் நிலையம் அருகே தீ விபத்து

Jul 15, 2021 05:55 PM 1724

மதுரை மாநகர் கீழ் மதுரை ரயில் நிலையம் அருகே அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தங்களுடைய கால்நடைக்கு வழங்குவதற்காக வைகோலை சேமித்து வைத்துள்ளார், இந்த நிலையில் அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் வைக்கோல் மீது தீ வைத்து விட்டு சென்றுள்ளனர், இதனால் வைகோல் மேல் பற்றிய தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது,

தகவல் அறிந்து விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர், மேலும் விபத்து நடைபெற்ற போது ரயில்கள் எதுவும் வராமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது, மேலும் வைக்கோலுக்கு தீ வைத்த மர்ம நபரை கீரைத்துரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Comment

Successfully posted