சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி!

Apr 05, 2021 04:13 PM 636

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.


காக்கிவாடன்பட்டி அருகே உள்ள எம்.துரைசாமி புரத்தில் ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு மூலப்பொருளுக்கான கலவை செய்யும்போது ஏற்பட்ட உராய்வில் வெடி பொருள்கள் வெடித்துள்ளது. இதில், அங்கிருந்த 4 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

கட்டட இடுபாடுகளில் சிக்கி தர்மராஜ் என்ற ஊழியர் உயிரிழந்தார். பலத்த காயத்துடன் மீட்கபட்ட இருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் மாரனேரி காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted