கிணற்றில் குதித்து மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த பெண் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

Sep 28, 2020 09:35 AM 208

திருப்பூர் அருகே, கிணற்றில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காந்திஜி நகரைச் சேர்ந்த கலா என்ற பெண் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இதனால், கவலையுடன் காணப்பட்ட அவர், மேட்டுவலசு செல்லும் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கலாவை பத்திரமாக மீட்டனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலாவிடம் தாராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted