சிறந்த பேரூராட்சியில் முதல் இடத்தில் சேலம் ஜலகண்டாபுரம்

Aug 15, 2018 11:53 AM 1052

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின், நல் ஆளுமை விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,   உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக  திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தேனி பழனிசெட்டிப்பட்டி, 2வது இடத்தையும், தருமபுரி பாலக்கோடு 3வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த நகராட்சிகளில் கோவில்பட்டி, கம்பம், சீர்காழி ஆகிய ஊர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. தமிழக அரசின் சிறந்த துறைக்கான பட்டியலில் பதிவுத்துறை முதல் இடத்தையும், உணவுத்துறை 2ஆம் இடத்தையும், சுகாதாரத்துறை 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. தமிழக அரசின் அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்படுகிறது. விறகு கட்டையால் சிறுத்தையை தனி ஆளாக விரட்டிய கோவை முத்துமாரிக்கு, தமிழக அரசின் துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவலா விருது  வழங்கப்படுகிறது.

Comment

Successfully posted